Paristamil Navigation Paristamil advert login

அஜித் சம்பளத்தைக் குறைக்க சம்மதித்தாரா ?

அஜித் சம்பளத்தைக் குறைக்க சம்மதித்தாரா ?

10 புரட்டாசி 2025 புதன் 18:08 | பார்வைகள் : 172


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் – ஆதிக் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக அமைந்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என்றும் அதை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த படத்துக்காக அஜித் 185 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும், அதனால் அதைத் தயாரிக்க தயாரிப்பாளர் தயங்குவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் தயாரிப்புப் பணியை மேற்கொள்ள ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அஜித் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மத்திருப்பார் என்று தகவல் பரவி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்