Paristamil Navigation Paristamil advert login

நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைக் கோரி வழக்கு

நயன்தாரா  ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைக் கோரி வழக்கு

10 புரட்டாசி 2025 புதன் 18:08 | பார்வைகள் : 171


நயன்தாரா குறித்து உருவாகி வரும் ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்த நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தவிர்த்து பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள நயன்தாரா குறித்து டார்க் ஸ்டுடியோ என்ற நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம் ரஜினிகாந்துடன் நடித்த சந்திரமுகி. இதனால் ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சந்திரமுகி டிஜிட்டல் உரிமைகளை வைத்துள்ள ஏபி இண்டெர்நேஷனல் நிறுவனம், அந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி காட்சிகளை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

முன்னதாக நெட்ப்ளிக்ஸ் தயாரித்த நயன்தாராவின் கல்யாணம் குறித்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிராக தயாரிப்பாளர் தனுஷ் வழக்குத் தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நயன்தாரா குறித்த ஆவணப்படங்களுக்கு எழுந்து வரும் சிக்கல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்