பாகிஸ்தானில் கடும் பருவமழை மற்றும் வெள்ளப் பேரழிவு

10 புரட்டாசி 2025 புதன் 18:15 | பார்வைகள் : 179
பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா நிதி உதவி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய கடும் பருவமழை மற்றும் வெள்ளப் பேரழிவால் சுமார் 40 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 900 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆப்கான் அகதிகளுக்கும் உதவியாக கனடா 2.6 மில்லியன் கனேடிய டாலர் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரன்தீப் சராய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்திற்கு இரண்டு மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.
இது பெரும்பாலும் ஆப்கான் அகதிகளை ஆதரித்து வந்தாலும், தற்போது அவசர நிவாரண பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்துக்குப் பிறகும், கனடா 58 மில்லியன் டாலர் உதவியை பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1