கடற்பயணம்! - மூவர் பலி.. மூவரைக் காணவில்லை!!

10 புரட்டாசி 2025 புதன் 13:48 | பார்வைகள் : 430
பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு படகுமூலம் பயணித்த மூவர், கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும் மூவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பா-து-கலேயின் Sangatte கடற்கரையில் செப்டம்பர் 10 ஆம் திகதி அதிகாலை 5 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிய காற்று நிரப்பட்ட படகு ஒன்றில் 38 அகதிகள் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகு தலைகீழாய் கவிழ்ந்து அதில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர். அவர்களில் இருவர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப்பணிகள் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில், படகில் பயணித்தவர்களில் மூவரைக் காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக நேற்று மாலை Boulogne-sur-mer பகுதியில் 115 பேரை தாங்கிக்கொண்டு இரு படகுகள் பயணித்த நிலையில், அவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1