கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் பெண் பலி! - முன்னாள் காதலனுக்கு வலைவீச்சு!!
10 புரட்டாசி 2025 புதன் 11:45 | பார்வைகள் : 2911
கத்திக்குத்துக்கு இலக்காகி 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது முன்னாள் காதலன் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்,.
பிரான்சின் மேற்கு நகரமான Poitiers இல் இச்சம்பவம் நேற்று செப்டம்பர் 9, செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 1999 ஆம் ஆண்டு பிறந்த பெண் ஒருவர் அங்குள்ள நகர்ப்புறம் ஒன்றின் அருகே உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் இருந்து படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலில் கத்தியால் தாக்கப்பட்ட பல காயங்கள் இருந்ததாகவும், அதிகப்படியான இரத்தப்போக்கு பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது,
பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களிலேயே அவர் பலியாகியுள்ளார்.
1989 ஆம் ஆண்டு பிறந்த 36 வயதுடைய ஒருவர் காவல்துறையினரால் தேடப்படுகிறார். மேற்படி தாக்குதலை அவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த கொல்லப்பட்ட பெண் அவரது முன்னாள் கணவர் அடிக்கடி துன்புறுத்துவதாக பல வழக்குகளை காவல்நிலையத்தில் பதிவு செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan