Paristamil Navigation Paristamil advert login

கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

10 புரட்டாசி 2025 புதன் 06:03 | பார்வைகள் : 777


கத்தாரில் தங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இஸ்ரேல் இராணுவ வானொலி இது தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

காஸா சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹமாஸ் பிரதிநிதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக மற்றுமொரு முன்னணி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

கத்தாரின் தலைநகர் தோஹாவில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்தத் தாக்குதல் ஹமாஸ் காசா தலைமைப் பொறுப்பாளர் கலீல் அல்-ஹய்யா உட்பட முக்கிய தலைவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

தலைநகர் தோஹாவின் கட்டாரா பகுதியின் மீது புகை எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த தாக்குதல் சம்பவத்தை கத்தார் அரசாங்கம் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இலக்கு வைக்கப்பட்ட பகுதி மக்கள் குடியிருப்புகளுக்கு மிகவும் அண்மையில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

 

கடந்த ஒரு மாத காலத்தில் இஸ்ரேலிய இராணுவம் ஆறு அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்