நயாகராவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசியவர் கைது
9 புரட்டாசி 2025 செவ்வாய் 18:12 | பார்வைகள் : 1564
கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் கடந்த கோடைக்காலத்தில் நெடுஞ்சாலை மேம்பாலங்களில் இருந்து வாகனங்கள் மீது கற்களை வீசி எறிந்த சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாண காவல் துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பல நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்களுக்கு மேம்பாலங்களில் இருந்து கற்கள் எறியப்பட்டதாக காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென் கெதரீன்ஸ் நகரத்தைச் சேர்ந்த அம்மார் அல்-சுபைதி (48), என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒன்பது முறை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan