Paristamil Navigation Paristamil advert login

நயன்தாராவும் சிரஞ்சீவியும் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்களா?

நயன்தாராவும் சிரஞ்சீவியும் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்களா?

9 புரட்டாசி 2025 செவ்வாய் 17:23 | பார்வைகள் : 205


தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, காட் பாதர் போன்ற படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது மன சங்கர வரபிரசாத் காரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அனில் ரவிபுடி இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாராவோடு, கேத்ரின் தெரசா இன்னொரு நாயகியாக நடித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் இப்படத்திற்காக சிரஞ்சீவி – நயன்தாரா இணைந்த பாடல் காட்சியை வெளிநாடுகளில் படமாக்கியிருந்தனர். தற்போது அவர்கள் இளமையான கெட்டப்பில் தோன்றும் பிளாஷ்பேக் டூயட் பாடல் காட்சியை ஐதராபாத்தில் இன்று முதல் படமாக்கி வருகின்றனர்.

இதற்கென பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆடம்பரமான உடையணிந்து சிரஞ்சீவியும் நயன்தாராவும் நடனமாடுகிறார்கள். குறிப்பாக இந்த பாடலில் நயன்தாரா கவர்ச்சிகரமான தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொழில்நுட்ப உதவியுடன் இருவரையும் இளமையாகக் காட்ட இயக்குநர் அனில் ரவிபுடி திட்டமிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்