Paristamil Navigation Paristamil advert login

தீபாவளி ரேஸில் இருந்து திடீரென விலகிய பிரதீப் ரங்கநாதன் படம்..!

தீபாவளி ரேஸில் இருந்து திடீரென விலகிய பிரதீப் ரங்கநாதன் படம்..!

9 புரட்டாசி 2025 செவ்வாய் 16:23 | பார்வைகள் : 175


தீபாவளி பண்டிகை என்றாலே புதுப்படங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கும் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதே தீபாவளி ரேஸ் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது. இந்த ஆண்டு தீபாவளியன்று மற்றுமொரு சுவாரஸ்யமான சம்பவம் நடக்க இருந்தது. அது என்னவென்றால் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூடு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருந்தன. பல வருடங்களுக்கு பின்னர் ஒரே நாளில் ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகளும் வலம் வந்தன. ஆனால் தற்போது அதில் ஒரு படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி இருக்கிறது.

தீபாவளி ரேஸில் விலகிய படம் வேறெதுவுமில்லை, பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தான். இப்படம் முன்னதாக செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது, பின்னர் தீபாவளிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தீபாவளி ரேஸில் இருந்தும் விலகி உள்ளதால், அப்படம் எப்போது தான் ரிலீஸ் ஆகும் என்பது தெரியாமல் ரசிகர்களே குழம்பிப் போய் உள்ளனர். இப்படத்தை நடிகை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ரவி வர்மன் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் ஓடிடி டீல் இன்னும் விற்பனை ஆகாததால் இதன் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இது டைம் டிராவல் படமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி இருப்பதால் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூடு திரைப்படம் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அவர் இசையில் வெளிவந்த டியூடு திரைப்படத்தின் முதல் பாடலான ஊறும் பிளெட் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்