Paristamil Navigation Paristamil advert login

கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

9 புரட்டாசி 2025 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 244


இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பும் குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல், துனிசியா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை 09-09-2025 ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் , காலநிலை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச் சென்றுள்ளது.

கப்பலில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அவர்களும் சென்றுள்ளார்.

குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற “குடும்ப கப்பல் என அழைக்கப்படும் முக்கிய கப்பல்களில் ஒன்று ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதை குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (GSF) உறுதிப்படுத்துகிறது.

போர்த்துகீசியக் கொடி ஏந்திய கப்பலில் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். 

தற்போது விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் அது உடனடியாக வெளியிடப்படும் எனவும் GSF அமைப்பு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்