Paristamil Navigation Paristamil advert login

பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் வீழ்ந்தது: மக்ரோன் புதிய பிரதமரை “அடுத்த சில நாள்களில்” நியமிப்பார்!!

பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் வீழ்ந்தது:  மக்ரோன் புதிய பிரதமரை “அடுத்த சில நாள்களில்” நியமிப்பார்!!

8 புரட்டாசி 2025 திங்கள் 20:45 | பார்வைகள் : 1675


பிரான்சுவா பெய்ரூ தலைமையிலான பிரஞ்சு அரசு, தேசிய சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் காரணமாக வீழ்ச்சி அடைந்தது. 

மொத்தம் 364 எம்பிக்கள் எதிராகவும், 194 பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். குடியரசு தலைவர் இம்மானுவேல் மக்ரோன், பெய்ரூவின் ராஜினாமை செவ்வாயன்று ஏற்றுக்கொள்வார் என்றும், அடுத்த சில நாள்களில் புதிய பிரதமரை நியமிப்பார் என்றும் எலிசே மாளிகை அறிவித்துள்ளது. 

இந்த அரசாங்க வீழ்ச்சி, நாட்டின் அரசியல் நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியுடன் எதிர்வினை தெரிவித்துள்ளன. 

மெலன்சோன் மக்ரோனை பதவிவிலக அழைத்துக்கொண்டார், மற்றும் NFP கட்சி அடுத்த பிரதமர் தங்களிடம் இருந்தே வரவேண்டும் என்று வலியுறுத்துகிறது. கப்ரியல் அட்டால், தானாகவே பிரதமர் ஆக மாட்டேன் என்றும், ஒருவரை பேச்சு வார்த்தைக்காக நியமிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். 

பெய்ரூ, இந்த சோதனையை தனது விருப்பத்திலேயே எதிர்கொண்டதாகவும், இது உண்மை வெளிப்படும் தருணம் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்