நேபாளத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி
9 புரட்டாசி 2025 செவ்வாய் 06:18 | பார்வைகள் : 2004
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைதளங்களுக்கு கடந்த 4 ஆம் திகதி நேபாள அரசாங்கம் தடை விதித்தது.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்மண்டுவில் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 14 பேர் பலியான நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan