இலங்கையில் 83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது
8 புரட்டாசி 2025 திங்கள் 19:18 | பார்வைகள் : 4152
வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல, ஹொரகொல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனையைத் தொடர்ந்து, வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் மற்றும் கணேமுல்லையைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஆகிய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கணேமுல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan