முருங்கைக்கீரை கூட்டு..

8 புரட்டாசி 2025 திங்கள் 18:13 | பார்வைகள் : 117
வாரம் ஒரு முறையேனும் முருங்கைக்கீரை எடுத்துக்கொண்டால் இரும்புச் சத்து குறைபாட்டை தவிர்க்கலாம். ஆனால் இதை குழந்தைகள் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அதன் மிதமான கசப்புத் தன்மை அவர்களுக்கு பிடிக்காது. எனவே இப்படி பருப்பு சேர்த்து கூட்டு செய்து கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி அளவு
பாசி பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
advertisement
பச்சை மிளகாய் - 1
உப்பு - தே.அ
தேங்காய் - 2 துண்டு
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் பாசி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் சேர்த்து அதோடு மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
பின் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கீரையை அலசி சேர்க்கவும். கீரை சுருங்கி வெந்ததும்
வேக வைத்த பருப்பை நன்கு மசித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் தேங்காய் மற்றும் சீரகத்தை மிக்ஸி ஜாரில் மைய அரைத்து அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
கூட்டு பதத்திற்கு தண்ணீர் வத்தியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். சுவையான முருங்கைக்கீரை கூட்டு தயார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1