Paristamil Navigation Paristamil advert login

ஆசையை தூண்டும் போலி செல்போன் செயலிகள்!

ஆசையை தூண்டும் போலி செல்போன் செயலிகள்!

8 புரட்டாசி 2025 திங்கள் 12:28 | பார்வைகள் : 153


ஒன்லைன் வாயிலாக பணமோசடி செய்யும் கும்பல்கள், தற்போது போலி செயலிகள் மூலமாகவும் பணத்தை பறிக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த கும்பல் Trading செயலிகள் போலவே Identical ஆக போலி செயலியை உருவாக்கி, பயனாளர்களை பணத்தை அதற்கு Transfer செய்யுமாறு கோருகிறார்கள்.

 

அதனை நம்பி Trade செய்யலாம் என்று 10,000 ரூபாயை (உதாரணமாக) நாம் பணப்பரிமாற்றம் செய்த பின், நமக்கு 11,500 கிடைக்கும்.

 

 

அந்த பணத்தை நாம் வீடியோவைப் பார்ப்பதுபோல் செல்போன் திரையில் பார்ப்போம். ஆனால் உண்மையில் Trading எதுவும் நடக்காது.

 

ஒரு பகுதி பணத்தை நாம் அதிலிருந்து எடுக்கலாம் என்று நினைத்தால் எடுக்க முடியாது. அப்போதுதான் அது ஒரு போலி செயலி என்பதையே நாம் அறிவோம் என்கிறார் வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாதன்.

 

மேலும் நாம் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்திய பின்னர் அதனை திரும்ப எடுக்கலாம் என்றால், தாமதமாக பணம் செலுத்தப்பட்டதால் அபராதம் கட்டிய பின்னர்தான் உங்கள் பணத்தை எடுக்க முடியும் என்றும் போலி செயலியில் காட்டப்படும் என்றும் கூறுகிறார்.

 

இதுபோன்ற மோசடியில் பொலிஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் கூட ஏமாந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்