Paristamil Navigation Paristamil advert login

3 ஆண்டுக்கு பிறகு ஓய்வு முடிவை திரும்ப பெற்ற நியூசிலாந்து வீரர் - புதிய அணிக்காக அறிமுகம்

3 ஆண்டுக்கு பிறகு ஓய்வு முடிவை திரும்ப பெற்ற நியூசிலாந்து வீரர் - புதிய அணிக்காக அறிமுகம்

8 புரட்டாசி 2025 திங்கள் 11:09 | பார்வைகள் : 124


நியூசிலாந்து வீரர் ராஸ் டைலர், தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.

 

41 வயதான ராஸ் டைலர், 2006 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட தொடங்கினார்.

 

நியூசிலாந்து அணிக்காக 236 ODI, 112 டெஸ்ட் மற்றும் 102 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம்,நியூசிலாந்து அணிக்காக அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

 

டெஸ்ட், ODI, T20 ஆகிய 3 வடிவங்களிலும் சேர்த்து 18,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ள ராஸ் டைலர், கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

 

இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ராஸ் டைலர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும் அவர், நியூசிலாந்து அணிக்காக விளையாடப்போவதில்லை.

 

அதற்கு மாறாக, ஓமனில் நடைபெற உள்ள T20 உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டியில், சமோவா நாட்டு அணிக்காக விளையாட உள்ளார்.

 

ராஸ் டைலரின் தாய் சமோவோ நாட்டை சேர்ந்தவர். சமோவோ பூர்விகம் கொண்ட ராஸ் டைலர், தற்போது அந்த நாட்டு அணிக்காக விளையாட உள்ளார்.

 

ஐசிசி விதிப்படி, ஒரு நாட்டு அணிக்காக விளையாடிய வீரர், வேறு ஒரு நாட்டு அணிக்காக விளையாட வேண்டுமானால், அவர் கடைசியாக விளையாடிய போட்டியில் இருந்து 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.

 

 

தற்போது நியூசிலாந்து அணிக்காக அவர் விளையாடி 3 ஆண்டுகள் ஆன நிலையில், சமோவோ அணிக்காக களமிறங்க உள்ளார்.

 

தான் சமாவோ நாட்டு பூர்விகம் கொண்டவர் என்பதால், நியூசிலாந்தில் இனவெறியை எதிர்கொண்டதாக ராஸ் டைலர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்