உக்ரைனின் அமைச்சரவை மீது பாரிய வான்வழித் தாக்குதல்
7 புரட்டாசி 2025 ஞாயிறு 19:32 | பார்வைகள் : 5559
ரஷ்யா இதுவரை இல்லாத பாரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஒரே இரவில் 805 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் உக்ரைனின் அமைச்சரவை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டதும், கூரை தீப்பிடித்து எரிவதையும் பார்த்ததாக நிருபர் ஒருவர் கூறினார்.
மேலும், கீவ்வில் உள்ள பல உயரமான கட்டிடங்களையும் ட்ரோன் தாக்குதல்கள் சேதப்படுத்தின.
தலைநகர் கீவ்வின் மையப்பகுதியில் உள்ள ஒரு பரந்த அரசாங்க வளாகமான உக்ரைனின் அமைச்சரவையின் மீது நடத்தப்பட்ட போரின் முதல் தாக்குதல் இதுவாகும்.
பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ (Yulia Svyrydenko) தாக்குதல் குறித்த தனது பதிவில், "எதிரியின் தாக்குதலால் கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்தன.
மீட்புப் பணியாளர்கள் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடங்களை மீட்டெடுப்போம். ஆனால் இழந்த உயிர்களை மீண்டும் கொண்டுவர முடியாது.
எதிரி நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் நம் மக்களை பயமுறுத்தி கொல்கிறார்" என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan