மூளைக்கு தேவையான புரதச்சத்துக்களை தரும் வாழைப்பழம் !!
16 மாசி 2021 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 12507
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்த்தடுப்பு நாசினியும்கூட. ஆகவே இதை நாம் தினமும் உண்ணவேண்டும்.
மலச்சிக்கல்: உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான ஃபைபர் இருப்பதால் உங்கள் குடலைச் சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியைச் சுத்தமாகப் போக்கிவிடுகிறது.
மந்தம்: நம்முள் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழுந்துவிட்டால்கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக்கொள்வார்கள். வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடிக்க வேண்டும்.
வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர்ச் சத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைப் போக்கிவிடுகிறது.
நெஞ்செரிப்பு: வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்புச் சக்தி இருப்பதால் வாழைப்பழத்தைத் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டுப் பறந்துவிடும்.
குடற்புண்: வாழைப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமலும் காக்கிறது.
மன அழுத்தம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பைக் கட்டுக்கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவைச் சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.
இரத்தச் சோகை: வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan