தேவா மீசைய முறுக்கு 2 படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? :

7 புரட்டாசி 2025 ஞாயிறு 17:46 | பார்வைகள் : 175
இசையமைப்பாளர் தேவா ஒரு காலகட்டத்தில் முன்னனி இசையமைப்பாளராக வலம் வந்தவர். கடந்த சில வருடங்களாக தேவா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கொழும்புவில் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதில் 'மீசைய முறுக்கு 2' படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாக கூறியுள்ளார்.
தேவா கூறுகையில், "மீசைய முறுக்கு 2 படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை மிக அற்புதமான ஒன்று. அதில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் கூறினேன். நான் இப்போது இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு என்னால் சரியாக ஒத்துழைப்பு தர முடியாது. நேரத்திற்கு என்னால் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாது. மேலும், நடிக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. எனக்கு நடிக்க தெரியாது. வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். ஆனால், நான் மறந்திடுவேன்" என கூறியுள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1