Paristamil Navigation Paristamil advert login

விஜய்யை வாழ்த்திய திரிஷா!

விஜய்யை வாழ்த்திய திரிஷா!

7 புரட்டாசி 2025 ஞாயிறு 17:46 | பார்வைகள் : 187


விஜய்யும் - திரிஷாவும், ‛கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ' என 5 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அதையடுத்து ‛தி கோட்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் திரிஷா. இந்த நிலையில் நேற்று துபாயில் சைமா விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரிஷா நடிக்க தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை அடுத்து அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையேறிய திரிஷா, ஆரம்பத்தில் இருந்து தன்னுடன் நடித்த அனைத்து ஹீரோக்கள் பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் புகைப்படத்தை அங்குள்ள திரையில் காண்பித்து இவரைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று திரிஷாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, விஜய்யின் அரசியல் பயணத்தை குறிப்பிட்டு, ‛‛அவரது புதிய பயணத்திற்கு குட்லக். அவருடைய கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும். அவர் அதற்கான அனைத்து தகுதியும் கொண்டவர்'' என்று வாழ்த்தி இருக்கிறார் திரிஷா.

வர்த்தக‌ விளம்பரங்கள்