கொத்தமல்லி இலையில் உள்ள மருத்துவகுணங்களும் சத்துக்களும்....!!
17 மாசி 2021 புதன் 06:48 | பார்வைகள் : 14019
கொத்தமல்லி இலைகள் வாயின் காயங்களை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலைகள் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.
கொத்தமல்லி தழைகள், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
கொத்தமல்லி இலைகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பு மேம்படும். இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. கொத்தமல்லி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan