L’Essonne பகுதியில் நடைபயிற்சி சென்றவர் சுட்டுக் கொலை!!

6 புரட்டாசி 2025 சனி 19:10 | பார்வைகள் : 1329
Yvelines பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர், l’Essonne (Bièvres) பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05/09/2025) இரவு கண்டுபிடிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் விளையாட்டு உடை அணிந்திருந்ததால், அவர் நடைபயிற்சி சென்றபோதே தாக்குதல் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பல துப்பாக்கிச் சுவடுகள் உடலில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் "கொலைக் குற்றம்" என வழக்கு பதிவு செய்யப்பட்டு, D’Évry நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் அறிவியல் பிரிவு சம்பவ இடத்தில் சான்றுகள் சேகரித்தது. உடல் பிந்தைய பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.