வெளிநாட்டு பயணத்தால் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
7 புரட்டாசி 2025 ஞாயிறு 12:17 | பார்வைகள் : 1933
ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன.இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஈர்க்கப்பட்ட முதலீடுகள் வெறும் எண்ணிக்கை அல்ல. அவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது ஆட்சியில் உள்ள திமுகவிற்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan