சாதகமான உறவை விரும்புகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதில்
7 புரட்டாசி 2025 ஞாயிறு 09:19 | பார்வைகள் : 759
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும், அமெரிக்கா உடன் சாதகமான உறவை விரும்புகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். மோடி சிறந்த பிரதமர். இந்தியா- அமரிக்கா உறவுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை'' என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிபர் டிரம்பின் கருத்தை வரவேற்கிறேன். இந்தியா உடனான உறவு குறித்து சாதகமான மனநிலையை வெளிப்படுத்திய அதிபர் டிரம்பை பாராட்டுகிறேன்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும், அமெரிக்கா உடன் சாதகமான உறவை விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan