100 ரூபாய்க்கு உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் - எப்படி வாங்குவது?

6 புரட்டாசி 2025 சனி 12:16 | பார்வைகள் : 629
மகளிர் உலககோப்பையை பிரபலப்படுத்த ரூ.100 க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
8 நாடுகள் பங்குபெறும் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி தொடங்கி, நவம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பைக்கான மொத்த பரிசுத்தொகை 13.88 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.121 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக்கோப்பையை பிரபலப்படும் நோக்கில், கூகிள் நிறுவனத்துடன் ஐசிசி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், முதல்முறையாக 100 ரூபாய்க்கு உலக கோப்பைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை செப்டம்பர் 4 ஆம் திகதி தொடங்கி உள்ளது.
Tickets.cricketworldcup.com என்ற இணையத்திற்கு சென்று, Google pay மூலமாக ரூ.100 க்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வழக்கமான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை தொடக்க விழா அசாம் மாநிலம், கவுகாத்தியில் செப்டம்பர் 30 ஆம் திகதி நடைபெற உள்ளது.