ரஷ்யா-உக்ரைன் போர் - ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

5 புரட்டாசி 2025 வெள்ளி 18:35 | பார்வைகள் : 228
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பில் சீனாவிற்கு பொருளாதார அழுத்தம் கொடுக்க ஐரோப்பாவை ட்ரம்ப் வலியுறுத்துகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலுக்கு சீனா ஆதரவளிக்கிறது என குற்றம்சாட்டி, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்களுடன் video conference-ல் உரையாடிய ட்ரம்ப், "போருக்கு நிதியளிக்கின்ற ரஷ்ய எண்ணெய் வாங்குவதை ஐரோப்பா நிறுத்தவேண்டும்" என கூறியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா போன்ற நாடுகள் இன்னும் ரஷ்ய எண்ணெய் வாங்கி வருவதால் சர்வதேச தடைகள் பலவீனமாகிவிடுகின்றன என கவலை தெரிவித்தார்.
மேலும், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது மற்றும் உக்ரைனின் வான்வழி பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த ட்ரம்ப், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரிய தலைவர்கள் ஒன்றாக இரண்டாம் உலகப்போரின் நினைவாக நடைபெற இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றதை 'சதி கூட்டணி' என குறிப்பிட்டார்.
இது அமெரிக்கா-சீனா உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஐரோப்பா முழுமையாக ஒன்றுபட்டு ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக பொருளாதார அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் வலியுறுத்துகிறார்.
ஆனால், எண்ணெய்க்காக ரஷ்யாவை சார்ந்துள்ள சில ஐரோப்பிய நாடுகள் கடுமையான தடைகளை ஏற்க தயங்குகின்றன. இதனால், ஐரோப்பா முழுவதும் ஒருமித்த நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது. இது உக்ரைன் போருக்கான தீர்வை மேலும் தாமதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1