Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

5 புரட்டாசி 2025 வெள்ளி 16:01 | பார்வைகள் : 200


சாமி மலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் கடந்த 3 ஆம் திகதி வான் ஒன்றில் கடத்தப்பட்ட 15 வருடம் 8 மாதம் வயதுடைய சிறுமி பேருவளையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் 3ஆம் திகதி காலை 8 மணிக்கு தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளையில், பெயலோன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயின்று இடை நடுவில் வெளியேறிய சாமி மலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் உள்ள மாணவி வெள்ளை நிற வேன் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டதாக சிறுமியின் தந்தை முறைப்பாடளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸாரின் தேடுதலுக்கு அமைய நேற்று பேருவளை பகுதியில் உள்ள 26 வயது உடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்து வரப்பட்டார்.

இன்று 5 ம் திகதி விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதி மன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாகவும், மீட்கப்பட்ட மாணவி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்