Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வு 2,200ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வு 2,200ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

5 புரட்டாசி 2025 வெள்ளி 11:26 | பார்வைகள் : 187


கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வினால் அழிக்கப்பட்ட வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான உடலங்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றன.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். மூவாயிரத்துக்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 31.08-2025 இரவு மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிழக்கின் பல மாகாணங்களில் 6.0 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது.

இதன்போது பல கிராமங்கள் தரைமட்டமாகின.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கத்திடம், அவசரகால மீட்பு முயற்சிகளுக்காக ஒரு இலட்சம் டொலர்கள் மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சர்வதேச உதவிகளை தாலிபான் அரசாங்கம் கோரியுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்