Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 15 உயிர்களை பலி கொண்ட விபத்து - ஒருவர் பலி

இலங்கையில் 15 உயிர்களை பலி கொண்ட விபத்து - ஒருவர் பலி

5 புரட்டாசி 2025 வெள்ளி 08:51 | பார்வைகள் : 183


எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் ராவணா எல்லவுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்துச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை நகர சபையின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுற்றுலா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக பதுளை போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 18 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கு காரணமான ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்