Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவுக்கு ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

பிரித்தானியாவுக்கு ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

5 புரட்டாசி 2025 வெள்ளி 07:51 | பார்வைகள் : 240


பிரித்தானியாவுக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றுவோம் என ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியா, முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பயன்படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை உக்ரைனுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

அவ்வகையில், ஒரு பில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு ராணுவ உதவியாக வழங்க இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியான Dmitry Medvedev, பிரித்தானியா ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை உக்ரைனுக்கு ராணுவ உதவியாக வழங்கினால், பதிலுக்கு, பழிக்குப்பழியாக பிரித்தானிய சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என எச்சரித்துள்ளார்.

 

ரஷ்ய சொத்துக்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்தால், பதிலுக்கு பிரித்தானியாவுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.

 

அத்துடன், உக்ரைனிலிருந்து மேலும் அதிக நிலப்பரப்பையும் கைப்பற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளார் Dmitry Medvedev.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்