ஜிஎஸ்டி வரிவிதிப்பு - பன்மடங்கு உயரும் ஐபிஎல் டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு அதிர்ச்சி

5 புரட்டாசி 2025 வெள்ளி 07:51 | பார்வைகள் : 125
ஐபிஎல் டிக்கெட்டுகளுக்குக்கான வரி விகிதங்கள் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசாங்கம் ஜிஎஸ்டி (GST) தொடர்பில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அரசின் மறுசீரமைப்பின்படி பல்வேறு பொருட்கள், சேவைகளில் வரியில் மாற்றம் ஏற்படப்போகிறது.
அந்த வகையில், ஐபிஎல் டிக்கெட்டுக்கான விலையும் 28 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 40 சதவீதமாக மாறப் போகிறது.
இதன்மூலம் அடிப்படை விலை ரூ.1000யில் உள்ள டிக்கெட்டின் இறுதி விலை, இப்போது ரூ.1280யில் இருந்து ரூ.1400 ஆக உயரும்.
இந்த விலையுயர்வு ஐபிஎல் தொடரை இந்தியாவின் மிக உயர்ந்த ஜிஎஸ்டி அடைப்பில் வைக்கிறது. அதாவது கேசினோக்கள் அல்லது ரேஸ் கிளப்கள் போல் ஐபிஎல்லும் மாறும்.
அதே சமயம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தில் பார்ப்பதற்கான டிக்கெட் விலைக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் ரூ.500க்கும் மேல் விலையுள்ள டிக்கெட்டுகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
மேலும் ரூ.500க்கு கீழ் விலையுள்ள டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, சர்வதேச போட்டிகள் மற்றும் பிற அரசு நடத்தும் லீக்குகளுக்கான டிக்கெட்டுகள் எதிர்காலத்தில் மலிவாக மாறக்கூடும்.
தற்போது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டின் அடிப்படை விலை ரூ.1000 என்றால், வரிகள் சேர்க்கப்பட்ட பின் அதன் விலை ரூ.1280 ஆக இருக்கும்.
ஆனால், இந்த புதிய மாற்றத்தினால் அதே விலை ரூ.1180 ஆக குறையும். இந்த மாற்றங்கள் செப்டம்பர் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1