Paristamil Navigation Paristamil advert login

இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை; ஆக்ஸ்போர்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை; ஆக்ஸ்போர்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

5 புரட்டாசி 2025 வெள்ளி 10:37 | பார்வைகள் : 154


வளமான தமிழகமாக நமது மாநிலம் வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்க கூடிய மாநிலமாக உயர்ந்து இருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை,'' என லண்டனில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

லண்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்போர்டு பல்கலை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஈவெரா உருவப்படத்தை திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: பல நூற்றாண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலை அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்க நான் தமிழக முதல்வர், தெற்காசியாவில் அரசியலை புரட்டி போட்ட இயக்கமான திமுக இயக்கதின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல, ஈவெராவின் பேரன் என்கிற கம்பீரத்துடன் உங்கள் முன் வந்து இருக்கிறேன்.

முன்னேற்றம்

ஈவெராவின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலையில் திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

இந்த ஐரோப்பிய பயணத்தில் பார்த்தது, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து, ஏராளமான பேர் இங்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.தமிழகம் எல்லாவற்றிலும் முன்னேறி வருகிறது.

சாதனை

கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு வசதியில் முன்னேறி இருக்கிறோம், உலகத்தின் சாதனை உற்பத்தி சாதனையாக மாறி இருக்கிறது. பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. வளமான தமிழகமாக வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்க கூடிய மாநிலமாக உயர்ந்து இருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்