சாம் பில்லிங்ஸ் எளிமையானவர் - முன்னாள் CSK வீரர் குறித்து அஷ்வின் பேச்சு

5 புரட்டாசி 2025 வெள்ளி 06:51 | பார்வைகள் : 126
சாம் பில்லிங்ஸ் செல்வந்தராக இருந்தாலும், எளிமையானவர் என அஷ்வின் பேசியுள்ளார்.
இங்கிலாந்து வீரரான சாம் பில்லிங்ஸ், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக கடந்த 2018, 2019 தொடர்களில் விளையாடியுள்ளார்.
தற்போது ஐபிஎல் தொடர்களில் கலந்து கொள்ளாத அவர், ILT, CPL,PSL உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், CSK அணியின் முன்னாள் வீரரான அஷ்வின், சாம் பில்லிங்ஸ் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் குறித்து பேசிய அஷ்வின், சாம் பில்லிங்ஸ் சாதாரண நபர் இல்லை. கென்ட்(kent) நகரின் பாதி சொத்து அவருக்கு சொந்தம்.
இந்தியாவில் வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்திருப்பது சாதாரணமான ஒன்று. ஆனால், இங்கிலாந்தில் வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்திருப்பது எளிதான ஒன்று இல்லை.
சாம் பில்லிங்ஸ் வீட்டில் சமையல், வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற அனைத்து வேலைக்கும் தனித்தனி வேலை ஆட்கள் வைத்துள்ளார். அப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் அவர் எளிமையான மனிதர்.
அவர் CSK அணிக்காக சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். ஆனால் அந்த செயல்திறனை அவரால் தக்கவைத்து கொள்ள முடியவில்லை என்பதால் அணியில் இருந்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரில், 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பதால் அவர்கள் மீதும் அதிக அழுத்தம் உள்ளது. 2 அல்லது 3 போட்டிகளில் அவர்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்றால் வெளியேறிவிடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1