Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ.,வுக்கு 2029; அ.தி.மு.க.,வுக்கு 2031

பா.ஜ.,வுக்கு 2029; அ.தி.மு.க.,வுக்கு 2031

5 புரட்டாசி 2025 வெள்ளி 09:37 | பார்வைகள் : 147


அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, கடந்த ஏப்ரலில் சந்தித்து கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா. தொடர்ந்து, தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டார்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் விவகாரம், பாகிஸ்தான் மீதான போர் போன்ற பிரச்னைகள் எழுந்ததால், பா.ஜ., மேலிட தலைவர்களால் தமிழக அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடியாத நிலை உருவானது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியானதும், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பா.ஜ., மேலிடம் ஈடுபட்டது. அதற்கு, 'தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது.

பழனிசாமியிடம் கட்சியும், சின்னமும் உள்ளது. அதனால், அ.தி.மு.க., கட்டாயம் வெற்றி பெறும். ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், 2031 தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றும்; எனவே, பிரிந்து சென்றவர்களை அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர்க்க மாட்டோம்' என, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், அ,தி.மு.க., தலைமை தெரிவித்து விட்டது.

அதை ஏற்ற பா.ஜ., மேலிட தலைவர்கள், 'பா.ஜ.,வை பொறுத்தவரை, லோக்சபா தேர்தல் தான் முக்கியம்; 2029 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், 20 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். அதற்கு, அ.தி.மு.க., - பா.ஜ., தற்போதே இணைந்து செயல்பட்டால் தான், 100 சதவீத வெற்றி சாத்தியமாகும்' என தெரிவித்தனர். இதனால் தான் பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு பிரிந்து சென்றாலும், அவரை மீண்டும் சேர்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டவில்லை.

தினகரனும் கூட்டணியை விட்டு செல்வதாக அறிவித்து விட்டார். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு, 2029 லோக்சபா, 2031 சட்டசபை தேர்தல் தான் முக்கிய இலக்குகள் என, கட்சி வட்டாரங்கள் கூறின.

வர்த்தக‌ விளம்பரங்கள்