Paristamil Navigation Paristamil advert login

இன்று மனம் திறக்கிறார் செங்கோட்டையன்

இன்று மனம் திறக்கிறார் செங்கோட்டையன்

5 புரட்டாசி 2025 வெள்ளி 08:37 | பார்வைகள் : 146


கட்சியில் அதிருப்தியில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன், இன்று மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று கோபி அருகே திருமண மண்டப திறப்பு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதாக அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். ''அவரது மனதில் என்ன எண்ணம் உள்ளது என்பதை, அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு சரி என பட்டதை அவர் செய்திருப்பார். அது குறித்து நான் எதுவும் சொல்வது பொருத்தமாக இருக்காது,'' என்றார். இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரான செங்கேட்டையன், இன்று கோபியில் மனம் திறந்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார்.

பழனிசாமி தரப்பில் சமாதானமா

அடுத்து, அ.தி.மு.க., தலைமையிடம் முரண்பட்டு நிற்கும் உங்களை, பா.ஜ., தலைமை சமாதானப்படுத்த முயன்றதா அல்லது பழனிசாமி தரப்பினர் உங்களிடம் பேசினரா, என கேட்டனர். செப்., 5ல், இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்வேன் என ஏற்கனவே சொல்லி விட்டேன்.அதன் அடிப்படையில், செப்., 5ல் விபரமாக பேசுவேன்,'' என கூறி கைகூப்பி கும்பிடு போட்டு சென்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்