சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே பயங்கர வெடிப்பு சம்பவம்

4 புரட்டாசி 2025 வியாழன் 07:15 | பார்வைகள் : 261
சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையத்தின் அருகே மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் புதன்கிழமையான இன்று நடந்துள்ளது.
இதன் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என இதுவரை தெரியவரவில்லை.
மேலும், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெடிப்பு நடந்த இடத்தில் துருக்கி தங்களது ராணுவ தளத்தை அமைக்க திட்டமிட்டிருந்ததை அடுத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை அரங்கேற்றி இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழத் தொடங்கியுள்ளன.
அத்துடன் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சிரிய ராணுவ தள அமைப்புக்கு வழங்கப்பட்ட புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1