Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பாடகர் Joey Starr வீட்டில் கொள்ளை! - €100,000 யூரோக்கள் மாயம்!!

பரிஸ் : பாடகர் Joey Starr வீட்டில் கொள்ளை! - €100,000 யூரோக்கள் மாயம்!!

4 புரட்டாசி 2025 வியாழன் 01:49 | பார்வைகள் : 273


பாடகர் Joey Starr இன் பரிசில் உள்ள வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. 100,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகியுள்ளன.

ஆடம்பர கடிகாரம், நகைகள், தோல் பைகள் என விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையிடப்படுள்ளதாக முதல்கட்டமாக தெரிவிக்கப்படுகிறது. பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை காலை இத்தகவலை அரச வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாடகர் Joey Starr, 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த வீட்டில்  நடிகையும், மொடலுமான அவரது காதலி Pauline Latchoumanin உடன் வசித்து வருகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்