Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் - 22 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் - 22 பேர் பலி

3 புரட்டாசி 2025 புதன் 15:00 | பார்வைகள் : 242


பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை 02.09.2025 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்