Paristamil Navigation Paristamil advert login

சீன ஜனாதிபதி மீது குற்றச்சாட்டிய டொனால்ட் ட்ரம்ப்

சீன ஜனாதிபதி மீது குற்றச்சாட்டிய டொனால்ட் ட்ரம்ப்

3 புரட்டாசி 2025 புதன் 15:00 | பார்வைகள் : 230


சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்ததன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பு 03.09.2025 சீனாவில் நடைபெறுகின்ற போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தனது சமூக ஊடகக் கணக்கில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் போர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்