Paristamil Navigation Paristamil advert login

திடீர் ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க்

திடீர் ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க்

3 புரட்டாசி 2025 புதன் 11:45 | பார்வைகள் : 950


அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

35 வயதாகும் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்சேல் ஸ்டார்க் (Mitchell Starc), 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியை விளையாடினார்.

 

அதனைத் தொடர்ந்து 65 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் அவரது எகானமி 7.74 ஆகும்.

 

 

இதுவரை ஐந்து டி20 உலகக்கிண்ணத் தொடர்களில் பங்கேற்ற ஸ்டார்க், தற்போது டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

அனுபவமிக்க வீரரான ஸ்டார்க், வரவிருக்கும் டெஸ்ட் தொடர்கள் மற்றும் 2027ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்