Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் விசா காலாவதியான வெளிநாட்டு மாணவர்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் விசா காலாவதியான வெளிநாட்டு மாணவர்களுக்கு எச்சரிக்கை

2 புரட்டாசி 2025 செவ்வாய் 19:43 | பார்வைகள் : 271


விசா காலாவதியான பின் புகலிடம் கோரும் சர்வதேச மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களில் 15,000 பேர் வரை, கல்வி கற்றபின், தங்கள் நாடுகளில் பாதகமாக சூழல் இல்லை என்றால் கூட பிரித்தானியாவில் புகலிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooper.

பிரித்தானியாவின் புகலிடக்கோரிக்கை அமைப்பில் பெரிய அளவில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டு வருவது தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooper.

அதைத் தொடர்ந்து இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், புகலிடக்கோரிக்கை அமைப்பில் செய்யப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து விவரித்தார்.

அந்த நடவடிக்கைகளின்படி, தங்கள் விசா காலாவதியானபின் பிரித்தானியாவில் தங்கும் சர்வதேச மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என பிரித்தானிய அரசு எச்சரித்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்