இந்தோனேசியாவில் 8 பேருடன் ஹெலிகொப்டர் மாயம்

2 புரட்டாசி 2025 செவ்வாய் 17:16 | பார்வைகள் : 205
இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் புறப்பட்ட ஹெலிகொப்டடொன்று திடீரென மாயமாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் கொடாபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்ட் இந்தோ ஏர் விமானத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கலிமண்டன் மாகாணம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
அதில் இந்தியரை தவிர்த்து அமெரிக்கா, பிரேசில் நாட்டினர் என 8 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் வானில் பறக்கத் தொடங்கிய 8 நிமிடங்களில் ஹெலிகொப்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மண்டேவே பகுதியில் உள்ள 27 கிமீ போர்னியோ வனப்பகுதியில் குறித்த ஹெலிகொப்டரை இராணுவத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த தேடுதல் வேட்டையில் உள்ளூர் பொலிஸாரும் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1