800 பேர் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

2 புரட்டாசி 2025 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 225
ஆப்கானிஸ்தான் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில், உள்ளூர் நேரப்படி 31.08.2025 இரவு 11:47 மணிக்கு, 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்த 20 நிமிடங்களில் மீண்டும், 4.5 மற்றும் 5.2 ரிக்டர் அளவில் அடுத்தது நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குணார் மாகாணத்தில் 800க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 2500க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தலிபான் அரசு, தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களை தேடி வருகிறது.
காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்கிறது.
இந்த உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, "ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், இரங்கல் தெரிவித்ததோடு, அங்குள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, காபூலில் உள்ள இந்திய தூதரகம் மூலம், குணாரில் உள்ள 1000 குடும்பத்தினருக்கு தேவையான கூடாரங்கள், 15 டன் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை முதல் கூடுதல் உணவுப்பொருட்கள் அனுப்பப்படும். இந்த கடினமான நேரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் துணை நிற்கும்" என தெரிவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1