Paristamil Navigation Paristamil advert login

மேற்கு சூடானின் பாரிய மண்சரிவு - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு சூடானின் பாரிய மண்சரிவு - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

2 புரட்டாசி 2025 செவ்வாய் 07:09 | பார்வைகள் : 212


மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில் 1000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் 02.09.2025 உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்ட கிராமம் தற்போது முழுமையாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்