எலி இல்லையென்றால் 75 தொன் குப்பைகள் அதிகரிக்கும்! - நூதன கருத்தால் சர்ச்சை!!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 725
தலைநகர் பரிசில் எலிகளின் தொல்லை நீண்டகாலமாக நிலவி வருகிறமை அறிந்ததே. இந்நிலையில், பரிசில் எலிகள் இல்லை என்றால் ஆண்டுக்கு 75 தொன் குப்பைகள் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
விலங்குகள் நல அமைப்பு ஒன்றின் தலைவரும், பரிஸ் 11 ஆம் வட்டாரத்தின் துணை மேயருமான Grégory Moreau இக்கருத்தை தெரிவித்தார். “நாள் ஒன்றுக்கு எலி ஒன்று 75 கிராம் உணவு உட்கொள்கிறது. எலிகள் இல்லை என்றால் ஆண்டுக்கு 75 தொன் கழிவுகள் மேலதிகமாக சேரும்!’ என அவர் தெரிவித்தார். அதை அடுத்து இக்கருத்து உடனடியாகவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரிசில் 3 மில்லியனுக்கும் அதிகமாக எலிகள் நிறைந்துள்ளது. இதனால் எலிக்கடிகள் அதிகரித்துள்ளதோடு, துர்நாற்றம் வீசுவதற்கும் காரணமாக அமைகிறது.
இது தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்து வரும் நிலையில், மேற்படி கருத்து பெரும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
மேலதிக குப்பைகளை அகற்றுவதில் உள்ள சிக்கல்களையும், எலிகளின் இனப்பெருக்க ஆபத்தையும் உணராமல் இது போல் கருத்துக்களை தெரிவிக்கிறார் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1