2,500 ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!!

1 புரட்டாசி 2025 திங்கள் 20:08 | பார்வைகள் : 1686
இன்று புதிய கல்வி ஆண்டு ஆரம்பமானது. ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 12 மில்லியன் மாணவர்கள் பாடசாலை திரும்பினர்.
புதிய கல்வி ஆண்டில் 2,500 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை உள்ளதாக கல்வி அமைச்சர் Élisabeth Borne தெரிவித்தார். 99.9% சதவீதமான ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுட ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல முன்னேற்றம்!" என அமைச்சர் குறிப்பிட்டார்.
99.9% சதவீதம் என்பது 2,500 ஆசிரியர் வெற்றிடத்துடன் கூடிதாகும். அதேவேளை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100,000 மாணவர்கள் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய இரு நாட்களிலும் போக்குவரத்து பாதிப்புக்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.