Paristamil Navigation Paristamil advert login

"அனைத்தையும் முடக்குவோம்!" - செப்டம்பர் 10, 18 - தொழிற்சங்க வேலை நிறுத்தம்!!

1 புரட்டாசி 2025 திங்கள் 19:08 | பார்வைகள் : 704


 

செப்டம்பர் 10 மற்றும் 18 ஆம் திகதிகளில் CGT தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

"அனைத்தையும் முடக்குவோம்!" என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என பல்வேறு பொதுத்துறைகளில் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5.8 மில்லியன் பணியாளர்களைக் கொண்ட CGT தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பெரும் முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

"ஊழியர் நலன்களை பாதுகாக்கவும், தற்காலிக ஒப்பந்தம் கொண்ட ஊழியர்களை பாதுகாக்கவும்" இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்