Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியா முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகள்

அவுஸ்திரேலியா முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகள்

1 புரட்டாசி 2025 திங்கள் 19:35 | பார்வைகள் : 225


அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் அவுஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் குடியேறுவதை எதிர்த்து இந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டினர் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா" (March for Australia) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ண் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கான்பெராவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். சிட்னி உள்ளிட்ட பிற நகரங்களிலும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பல இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மெல்போர்ணில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சிலர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பேரணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் வெறுப்புணர்வைப் பரப்புவதாகவும், அவுஸ்திரேலிய சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் அந்நாட்டு குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், பல்லின கலாச்சாரம் என்பது அவுஸ்திரேலியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்