பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் வெள்ளம்

1 புரட்டாசி 2025 திங்கள் 19:35 | பார்வைகள் : 176
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல கிராமங்களும் பண்ணைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, பாகிஸ்தானின் பொருளாதாரம் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வெள்ளத்தினால் பயிர்கள் அழிவடைந்துள்ளதுடன், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக பதின்மூன்று ஏக்கர்கள் அழிந்துவிட்டதாக சினியோட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் தனது நெல் முற்றிலுமாக அழிவடைந்துள்ளதாகவும், பெண்களும் குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மீதமுள்ள பயிர்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் அந்த விவசாயி குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம் காரணமாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாகாண அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 7 இலட்சத்து 60 ஆயிரம் மக்களும், 5 இலட்சத்து 16 ஆயிரம் விலங்குகளும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளம் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெள்ளம் மிகவும் மோசமானது என்றும், தொடர்ந்து மழை பெய்ய கூடும் என்றும் அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பு பெரியதாக இருக்கும் என விவசாயிகளும் ஏற்றுமதியாளர்களும் எச்சரித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் அரிசி, கரும்பு, மக்காச்சோளம், காய்கறிகள் மற்றும் பருத்தி வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த ஆண்டில் அமோகமான நெல் விளைச்சலை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என அரிசி ஆலைகளின் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய சந்தையில் 19 சதவீத அமெரிக்க வரியை நாடு எதிர்கொள்கிறது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய சந்தையில் 19 சதவீத அமெரிக்க வரியை நாடு எதிர்கொள்கிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1