இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ரஷ்யா, சீனா; அலறும் அமெரிக்கா!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 08:43 | பார்வைகள் : 101
ரஷ்யா, சீனா தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், 'இந்தியா - அமெரிக்கா மக்களின் நலன்களுக்காக, இருநாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்வோம்' என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை சந்தித்து பேசினார். மூன்று தலைவர்களும் அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மேலும், இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையும், பிரதமர் மோடி, அதிபர் புடின் தலைமையில் நடந்தது. இந்தப் பயணத்தின் போது, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பிரதமர் மோடி காட்டிய நெருக்கம், அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா மக்களின் நலன்களுக்காக, இருநாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்வோம் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவு தொடர்ந்து புதிய உயரத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இது 21ம் நூற்றாண்டின் ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு உறவாகும். இந்த மாதம், நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் மக்கள், முன்னேற்றம் மற்றும் சாத்தியங்களை நாங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்.
புதுமை மற்றும் தொழில்முனைவோர் முதல் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் வரை, நமது இரு மக்களுக்கும் இடையிலான நீடித்த நட்புதான் இந்தப் பயணத்தை நீடித்து கொண்டு செல்கிறது. #USIndiaFWDForOurPeople (இந்தியா,அமெரிக்க மக்களுக்காக முன்னோக்கி செல்வோம்) எனும் ஹேஷ்டேக்கைப் பின்தொடர்ந்து, இதன் ஒரு பகுதியாக இருங்கள், எனக் குறிப்பிட்டுள்ளது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1